Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!!

#image_title

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!!

நடிகை அடா சர்மா நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென் அவர்கள் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.

நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி ஆகியோர் நடிப்பில் இந்த வருடம் மே மாதம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியிருந்தார்.

பெண்கள் நான்கு பேர் பாகிஸ்தான் தீவரவாதிகளாக மாற்றப்படும் கதைகளத்தை கொண்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு நாடு முழுவதும் பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பியது. திரைப்படத்தை வெளியே தடை எல்லாம் போடப்பட்டது. எனினும் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் திரையிடப்பட்டது. இதையடுத்து இயக்குநர் சுதிப்தோ சென் அவர்கள் அடுத்ததாக இயக்கும் திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகை அடா ஷர்மா அவர்கள் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு “பாஸ்டர் தி நக்சல் ஸ்டோரி” என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது இந்த திரைப்படத்திற்கான போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் தற்பொழுது உருவாக இருக்கும் இந்த திரைப்படம் நாட்டையே உலுக்கிய மறைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் அதிகமாக நடமாடும் பாஸ்டர் என்ற பகுதியின் பெயரை திரைப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பாஸ்டர் என்பதற்கு அருகில் தி நக்சல் ஸ்டோரி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த திரைப்படம் நக்சல் குறித்த திரைப்படமாக உருவாகவுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி உள்ளது. மேலும் திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2024வது வருடம் ஏப்ரல் 5ம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து நக்சல் குறித்த திரைப்படமாக உருவாகும் என்பதால் இதற்கு எத்தனை எதிர்ப்புகள் வரும் என்பது குறித்து தெரியவில்லை.

Exit mobile version