கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!!

0
92
#image_title

கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்..!!

நம் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று இட்லி, தோசை. இதற்கு பெரும்பாலும் சட்னியைத் தான் தொட்டு சாப்பிட செய்வார்கள். ஆனால் எப்பொழுதும் போல் ஒரேமாதிரி தேங்காய் சட்னி செய்து போர் அடித்த நபர்கள் ஒருமுறை கேரளா ஸ்டைலில் சட்னி செய்து பாருங்கள். இவை அதிக ருசி மற்றும் மணத்துடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 2 தேக்கரண்டி

* வேர்க்கடலை – 2 தேக்கரண்டி

* பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி

* துருவிய தேங்காய் – 1 கப்

* கொத்தமல்லி விதை – 1/2 கப்

* பச்சை மிளகாய் – 2

* இஞ்சி – 1 துண்டு

* புளி – ஒரு துண்டு

* உப்பு – தேவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 3 தேக்கரண்டி

* கடுகு – 1 தேக்கரண்டி

* உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி

* வரமிளகாய் – 2

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து நன்கு வறுத்து ஆற விடவும்.

பின் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, புளி, தேவைக்கேற்ப உப்பு சேத்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் தேங்காய் சட்னி தயார்.