கேரளா ஸ்டைல் துவரம் பருப்பு கறி ரெசிபி!

0
254
#image_title

கேரளா ஸ்டைல் துவரம் பருப்பு கறி ரெசிபி!

துவரம் பருப்பில் ஒரு ருசியான சமையல்… கேரளா பாணியில் செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்…

*துவரம் பருப்பு – 1/2 கப்
*மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
*வெங்காயம் – 1
*தக்காளி – 1
*பச்சைமிளகாய் – 3
*பூண்டு பற்கள் – 3
*கடுகு – 1/4 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1 கொத்து
*தேங்காய் துருவல் – சிறிதளவு
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி

துவரம் பருப்பு கறி செய்வது எப்படி?

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், பெருஞ்சீரகம், சீரகம் சேர்த்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

அடுத்து குக்கரில் 1 கப் துவரம் பருப்பு, மஞ்சள், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம் மற்றும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

பருப்பு கலவை நன்கு வெந்து வந்ததும் இறக்கி கடைந்து கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிய விட்டு பருப்பு கலவையில் சேர்த்து கலந்து விடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்தால் சுவையான பருப்பு கறி தயார்.