கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – சுவையாக செய்வது எப்படி?

0
143
#image_title

கேரளா ஸ்டைல் மட்டன் கிரேவி – சுவையாக செய்வது எப்படி?

Kerala Style Mutton Gravy :நம் அனைவருக்கும் பிடித்த இறைச்சிகளில் ஒன்று மட்டன். இதில் வறுவல், குழம்பு, தொக்கு என பல வகையாக செய்து உண்பது வழக்கம். அந்த வகையில் மட்டன் எடுத்தால் ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்து பாருங்கள். இது கேரள மக்களின் பிரியமான அசைவ உணவாகும். மட்டன் கிரேவி இப்படி செய்தால் மிகவும் சுவையாகவும் ஊரையே கூட்டும் மணத்துடனும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மட்டன் – 1/2 கிலோ

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

*தேங்காய் துண்டு – சிறிதளவு

*தக்காளி – 2 (நறுக்கியது)

*பூண்டு – 12 பற்கள் (நறுக்கியது)

*இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 2

*நறுக்கிய தேங்காய் – 1/4 கப்

*மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 2 1/2 தேக்கரண்டி

*மிளகுத் தூள் – 2 சிட்டிகை

*கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

How to make Kerala Style Mutton Gravy in Tamil:

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/2 கிலோ மட்டனை சேர்த்து கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் அதில் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வறுக்கவும்.

அடுத்து நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா உள்ளிட்டவைகளை சேர்த்து பச்சை வாடை நீங்கும் அளவிற்கு வதக்கவும்.

அடுத்து கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து ஒரு கிளறு கிளறி விடவும். அதன் பின் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். மட்டன் கலவையை நன்கு கிளறி விடவும்.
அடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி போட்டு 3 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து தயாரான குழம்பு மீது கொத்தமல்லி இலையைத் தூவி விடவும்.