Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் – அசத்தல் சுவையில் செய்வது எப்படி?

#image_title

கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு வறுவல் – அசத்தல் சுவையில் செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானோருக்கு உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு என்றால் அலாதி பிரியம். கிட்டத்தட்ட சிக்கன் சுவையில் இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுவையான மசாலா வறுவல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இந்த உருளைக்கிழங்கு வறுவல் கேரள மக்களின் பேவரைட் உணவு வகைகளில் ஒன்றாகும்.

தேவையான பொருட்கள்:-

வேக வைக்க:

*உருளைக்கிழங்கு – 2 (நறுக்கியது)

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – சிறிதளவு

வறுவல் செய்ய:

*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி

*சோம்பு – 1/4 தேக்கரண்டி

*இஞ்சி – சிறு துண்டு (பொடியாக நறுக்கியது)

*கருவேப்பிலை – 1 கொத்து

*பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

*பூண்டு – 6 முதல் 8(பொடியாக நறுக்கியது)

*தேஙகாய் துண்டு – 1/4 கப்

*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*கரம் மசால் – 1/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 2 சிட்டிகை அளவு

*பச்சை மிளகாய் – 1(நறுக்கியது)

*தக்காளி – 1(நறுக்கியது)

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

இரண்டு பெரிய சைஸ் உருளைக்கிழங்கு எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்தில் போட்டு காய் வேகும் அளவிற்கு தண்ணீர், சிறிதளவு தூள் உப்பு, சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும். காய் வெந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

அடுத்து 1 பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி 1 துண்டு எடுத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். அதேபோல் பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொரிய விடவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் 1 கொத்து கருவேப்பிலை போட்டு வதக்கவும்.

அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தக்காளி துண்டுகளை போட்டு வதக்கி கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசால், 2 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுத்து வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்து நன்கு வறுத்து அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் உருளைக்கிழங்கு வறுவல் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Exit mobile version