கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!

0
187
#image_title

கேரளா ஸ்டைலில் இறால் மீன் வறுவல்..!

அதிக ஊட்டச்சத்துள்ள இறால் மீனை மசாலில் ஊறவைத்து வறுவலாக செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

இறால் வறுவல் செய்யும் முறை….

தேவையான பொருட்கள்:-

*இறால் – 1/2 கிலோ
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*அரிசி மாவு – 1 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*சின்ன வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
*இஞ்சி – 1 துண்டு
*பூண்டு – 5 பல்
*கிராம்பு – 3
*சீரகம் – 1/2 தேக்கரண்டி
*வர மிளகாய் – 5
*மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
*மிளகு – 1/4 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு

செய்முறை…

1)இறாலை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும்.

2)வெங்காயம், இஞ்சி, பூண்டு, கிராம்பு, சீரகம், வர மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு, எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை… அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

3)இந்த பேஸ்டை இறால் மீனில் போட்டு கலக்கவும். அடுத்து அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

4)அடுப்பில் ஒரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

5)அடுத்து ஊற வைத்த இறாலை அதில் போட்டு சில நிமிடங்களுக்கு வதக்கவும்.

6)இறால் மீன் நன்கு வெந்து வந்ததும் கறிவேப்பிலை தூவி அடுப்பை அணைக்கவும். இந்த இறால் வறுவலை சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.