Kerala Style : கேரளா ஸ்டைல் “ரவா போண்டா”!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

0
94
#image_title

Kerala Style : கேரளா ஸ்டைல் “ரவா போண்டா”!! அசத்தல் டேஸ்டில் செய்வது எப்படி?

நாம் அடிக்கடி செய்து உண்டு வரும் ரவையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஈ, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், நார்ச்சத்து, மெக்னீசியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.

ரவையில் கேசரி, உப்புமா, லட்டு என பல வகைகள் இருக்கிறது.அதில் சத்தான பஞ்சு போன்ற இனிப்பு போண்டா செய்து கொடுத்தால் ரவை பிடிக்காது என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை ரவை – 1 கப்

*சர்க்கரை – 1/2 கப்

*உப்பு – 1 பின்ச்

*ஏலக்காய் தூள் – சிறிதளவு

*அரசி மாவு – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 1/2 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 முட்டையை ஊற்றி கலக்கி கொள்ளவும். பின்னர் 1 கப் வெள்ளை ரவை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

தொடர்ந்து 1 பின்ச் அளவு உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பின்னர் 1 தேக்கரண்டி அளவு அரசி மாவு சேர்த்து மீண்டும் கலந்து விடவும். பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.

இந்த ரவை கலவையை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து போண்டா பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் சூடேறியதும் அதில் தயார் செய்து போண்டா மாவை சிறு உருண்டைகளாக போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும். இந்த ரவை போண்டா கேரள மக்களின் பேவரைட் இனிப்பு பண்டமாகும்.