Kerala Style Recipe: கேரளா மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

0
179
#image_title

Kerala Style Recipe: கேரளா மீன் வறுவல் – சுவையாக செய்வது எப்படி?

மீன் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் நான் வெஜ் வகையாகும். இதில் அதிகளவு ஒமேகா 3 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து இருப்பதினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைத்து விடும். இந்த மீனில் ப்ரை, குழம்பு, என பல வெரைட்டி செய்து உண்ணப்பட்டு வருகிறது.

இதில் மசாலா கலவை தயார் செய்து மீனை பிரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுக்கும் வறுவல் கேரளாவில் பேமஸான ஒன்று ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*வஞ்சிரம் மீன் – நான்கு துண்டு

*மஞ்சள் தூள் – இரண்டு தேக்கரண்டி

*மிளகாய்த் தூள் – இரண்டு தேக்கரண்டி

*மிளகு சீரகத்தூள் – இரண்டு தேக்கரண்டி

*கஷ்மீரி மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி

*தனியாத் தூள் – ஒரு தேக்கரண்டி

*சோம்புத் தூள் – ஒரு தேக்கரண்டி

*வெங்காய விழுது – இரண்டு தேக்கரண்டி

*இஞ்சி பூண்டு விழுது – இரண்டு தேக்கரண்டி

*உப்பு – ஒரு தேக்கரண்டி

*புளி – சிறு துண்டு

*தேங்காய் எண்ணெய் – ஒரு கப்

*கருவேப்பிலை – 1 கொத்து

*பச்சை மிளகாய் – ஒன்று

மீன் வறுவல் செய்யும் முறை…

முதலில்

முதலில் வஞ்சிரம் மீன் 4 துண்டு எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ளவும். அடுத்து ஒரு பவுலில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு சீர்கத் தூள், கஷ்மீரி மிளகாய்த்தூள், தனியாத் தூள், சோம்புத் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் அரைத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, தேவையான அளவு தூள் உப்பு, அரைத்த பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை விழுதை சேர்க்கவும்.

பின்னர் சிறிதளவு புளிக் கரைசல் சேர்த்து நன்கு கலந்து விடவும். இந்த மசாலா பேஸ்ட்டில் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டங்களை சேர்த்து நன்கு கலந்து விடவும். இதை 15 நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் மசாலா கலவையில் ஊற வைத்துள்ள மீனை அதில் போட்டு இருபுறமும் நன்கு வெந்து வந்த பின்னர் ஒரு வாழை இலைக்கு மாற்றிக் கொள்ளவும். இவ்வாறு ஒவ்வொரு மீனையும் போட்டு வறுத்து எடுத்து பரிமாறவும். இந்த முறையில் மீன் வறுவல் செய்தால் மிகவும் பிரமாதமாக இருக்கும்.