Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!!

0
88
#image_title

Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ‘சிக்கன் ரோஸ்ட்’ – இந்த முறையில் செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கு சிக்கன் என்று சொன்னாலே நாக்கில் எச்சில் ஊரும். அந்த அளவிற்கு சிக்கன் வெறியர்கள் பலர் இருக்கின்றோம். இந்த சிக்கனை வைத்து சில்லி, குழம்பு, பிரட்டல், வறுவல், பிரியாணி என பல வகைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த சிக்கனை வைத்து செய்யப்படும் ரோஸ்ட் கேரளர்களின் பிரியமான நான் வெஜ் வகை ஆகும். இந்த சிக்கன் ரோஸ்ட் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Kerala Style Chicken Roast:-

தேவையான பொருட்கள்:-

*சிக்கன் லெக் பீஸ் – 2

*பூண்டு – 7 பற்கள்

*இஞ்சி – சிறு துண்டு

*சின்ன வெங்காயம் – 15

*தக்காளி – சின்னது ஒன்று

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

*கரம் மசாலா – 3/4 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

*தயிர் – 1/2 கப்

*எலும்மிச்சை சாறு – 1/2  தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

வறுக்க தேவையானவை:-

*தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

*பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

*தக்காளி – 1 (நறுக்கியது)

*உப்பு – தேவையான அளவு

*மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

*கொத்தமல்லி – சிறிதளவு

*கறிவேப்பிலை – சிறிதளவு

How to Make Kerala Chicken Roast:-

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு பார்த்தால் சிக்கன் லெக் பீஸ் போட்டு கீறி விடவும். அடுத்து அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதை 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து மிதமான தீயில்
முக்கால் பதம் வெந்து வரும் வரை விடவும். பின்னர் சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்

சிக்கனில் உள்ள தண்ணீர் வற்றிய பின்னர் வாணலியை இறக்கி வைக்கவும். அடுத்து அடுப்பில் மற்றொரு வாணலி வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொரித்து எடுக்கவும்

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

பின்னர் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறி விடவும். வாசனைக்காக கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை தூவி கிளறி இறக்கவும். இந்த முறையில் சிக்கன் ரோஸ்ட் செய்தால் அசத்தல் சுவையில் இருக்கும்.