Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் இஞ்சி தயிர் பச்சடி!!
ஒரு கப் தயிரில் சிறிது சிறிதாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து பின்னர் தாளிப்பு கலவையை அதில் சேர்ப்பதை இஞ்சி தயிர் பச்சடி என்று கேரளா மக்கள் அழைக்கிறார்கள்.
இந்த இஞ்சி தயிர் பச்சடியை சுவையாக செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*தயிர் – 1 கப்
*இஞ்சி – ஒரு சிறிய துண்டு
*பச்சை மிளகாய் – 2
*சின்ன வெங்காயம் – 10
*கடுகு – 1/2 தேக்கரண்டி
*கறிவேப்பிலை – 1 கொத்து
*உப்பு – தேவையான அளவு
*எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சி தயிர் பச்சடி செய்வதற்கு முதலில் 10 சின்ன வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து 2 பச்சை மிளகாயை காம்பு நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின் சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து 1 கப் தயிரில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
பின்னர் தயிரில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி விடவும். பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு, 1 கொத்து கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும். இதை தயிர் கலவையில் சேர்த்து நன்கு கலந்து விட்டால் இஞ்சி தயிர் பச்சடி தயார்.