Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் ராகி ஆப்பம் – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!
ஆப்பம் அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. ராகி மாவு, வடித்த சாதம், தேங்காய் சேர்த்து மாவாக அரைத்து ஆப்பம் செய்யப்படுகிறது. இந்த ஆப்பம் கேரள மக்களின் விருப்ப உணவாகும். கேரள மக்களின் பேவரைட் ராகி ஆப்பம் சுவையாக செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*ராகி மாவு – 2 கப்
*சாதம் – 1 கப்
*தேங்காய் துருவல் – 1 கப்
*உப்பு – தேவைக்கேற்ப
ராகி ஆப்பம் செய்வது எப்படி?
ஒரு மிக்ஸி ஜாரில் 2 கப் ராகி மாவு சேர்த்து கொள்ளவும். பின்னர் சிறிதளவு உப்பு மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய்ப் பூ சேர்க்கவும். அடுத்து 1 கப் வடித்த சாதம் மற்றும் அரைக்க தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கையால் நன்கு கலந்து விட்டு மூடி வைக்கவும். 8 மணி நேரம் மாவு ஊற வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஆப்பச் சட்டி வைத்து அவை சூடேறியதும் அப்ப மாவை ஊற்றி நன்றாக சுழற்றவும். பிறகு மூடி போட்டு மூடவும். ஆப்பம் நன்கு வெந்து வந்த பின்னர் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.
இந்த ராகி ஆப்பத்திற்கு தேங்காய் பால் அல்லது சிக்கன் ஸ்டூ வெஜிடபிள் ஸ்டூ சிறந்த காமினேஷனாக இருக்கும்.