Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் சிவப்பு அரிசி புட்டு – இப்படி செய்தால் அதிக ருசியாக இருக்கும்!!
புட்டு உணவு என்றால் கேரளா தான். கேரளாவில் பல புட்டு வகைகள் செய்து உண்ணப்பட்டு வருகிறது. இதில் செம்பா அரிசி புட்டு மாவு, தேங்காய் துருவல் மற்றும் இனிப்பு சேர்த்து தயாரிக்கப்படும் புட்டு மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-
*சிவப்பு அரிசி புட்டு மாவு – 1 கப்
*தேங்காய் – 1 கப்(துருவியது)
*உப்பு – 1 தேக்கரண்டி
செய்முறை-
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1 கப் சிவப்பு அரிசி மாவு சேர்த்து கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
அடுத்து 1 மூடி தேங்காய் எடுத்து துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.இதை சிவப்பு அரிசி கலவையில் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டி தன்மையை அடையாக் கூடாது. இலகுவான கையில் எடுத்தால் உதிரியாக வர வேண்டும்.
பின்னர் புட்டு மேக்கர் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள சிவப்பு அரிசி கலவை மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து கொள்ளவும். அடுத்து ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து கொள்ளவும். பிறகு புட்டு மேக்கரை வெய்ட் போடும் இடத்தில் வைக்கவும். அடுத்த 5 நிமிடத்தில் சிவப்பு அரிசி புட்டு தயார் ஆகிவிடும்.
பிறகு புட்டு மேக்கர் மூடியில் இருந்து ஆவி வந்ததும் அடுப்பை அணைக்கவும். பின்னர் வேக வைத்துள்ள சிவப்பு அரிசி புட்டை வெளியில் எடுக்கவும். இந்த சிவப்பு அரிசி புட்டுக்கு நேந்திரம் பழம் சிறந்த காமினேஷனாக இருக்கும்.