Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கேரளா ஸ்டைல் ரெசிபி: “பூசணி கூட்டான்” இப்படி செய்தால் ருசியும் மணமும் கூடும்!!

#image_title

கேரளா ஸ்டைல் ரெசிபி: “பூசணி கூட்டான்” இப்படி செய்தால் ருசியும் மணமும் கூடும்!!

கேரள மக்கள் தங்களது சமையலில் தேங்காய் எண்ணெய் உபயோகித்து சமைக்கின்றனர். இதனால் அவர்களின் உணவின் சுவை, வாசனை அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. புட்டு, இடியப்பம், கடலை கறி, அவியல் உள்ளிட்ட பிரபல கேரள உணவு வரிசையில் இருப்பது பூசணி கூட்டான். பூசணிக்காய் மற்றும் பச்சை வாழைக்காய் வைத்து சமைக்கப்படும் இந்த உணவை உண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பூசணிக்காய் – 100 கிராம்

*வாழைக்காய் – 1

*தேங்காய் துருவல் – 1/2 கப்

*புளிப்புத் தயிர் – 1 கப்

*பச்சை மிளகாய் – 4

*கடுகு – 1 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 முதல் 3 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

சிறிதளவு பூசணிக்காய் காய் மற்றும் ஒரு வாழைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நறுக்கி வைத்துள்ள காய்கறி துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

பின்னர் 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் 1/2 கப், 4 பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மைய்ய அரைக்கவும்.

இதை வெந்து கொண்டிருக்கும் காயில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு 1 கப் புளிப்பு தயிரை கடைந்து அதில் சேர்த்து கலந்து விடவும். இவை கொதித்து நுரை வந்தவுடன் இறக்கவும்.

அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 முதல் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர் அடுப்பை அணைத்து இந்த தாளிப்பை தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையில் சேர்த்து கொள்ளவும். இவ்வாறு செய்தால் பூசணி கூட்டான் அதிக மணம் மற்றும் சுவையுடன் இருக்கும்.

Exit mobile version