கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி!

0
180
#image_title

கேரளா ஸ்டைல் அரிசி மாவு பூரி ரெசிபி!

கோதுமை அல்லது மைதா மாவை வைத்து மட்டும் தான் நாம் பூரி செய்து சாப்பிட்டு வருகிறோம். சற்று வித்தியாசமாக பச்சரிசி மாவு வைத்து பூரி செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். இந்த பச்சரிசி மாவு பூரி கேரளா மக்களின் விருப்ப உணவு வகைகளில் ஒன்றாக இருக்கின்றது.

தேவையான பொருட்கள்:

*பச்சரிசி மாவு – 1 கப்
*தேங்காய் – 1/2 மூடி
*எண்ணெய் – தேவையான அளவு
*உப்பு – தேவையான அளவு
*பச்சை மிளகாய் – 1
*சின்ன வெங்காயம் – 4
*சீரகம் – 1/4 டீஸ்பூன்

செய்முறை…

**அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 கப் பச்சரிசி மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

**அடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

**ஒரு மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய சின்ன வெங்காயம், 1/4 டீஸ்பூன் சீரகம், 1 பச்சை மிளகாய், 1/2 மூடி துருவிய தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

**இதை சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் சேர்த்து கலந்து விடவும்.

**எடுத்து வைத்துள்ள 1 கப் பச்சரிசி மாவை அதில் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைக்கவும். பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

**அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் பூரி பொரித்து எடுக்க தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் தயார் செய்து வைத்துள்ள பச்சரிசி மாவை பூரி போல் உருட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து கொள்ளவும்.

இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் உருட்டி பூரி போட்டு எடுத்துக் கொள்ளவும். இந்த பூரிக்கு தேங்காய் சட்னி, மீன் குழம்பு சிறந்த காமினேஷனாக இருக்கும்.