Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவாளுக்கு மட்டும் தனி டாய்லெட்! இதுல கூட பிரிவினையா..? பொதுமக்கள் கண்டனம்!

அவாளுக்கு மட்டும் தனி டாய்லெட்! இதுல கூட பிரிவினையா..? பொதுமக்கள் கண்டனம்!

உலகத்தில் ஆண், பெண் என்ற வகையில் மட்டுமே தனித்தனியாக கழிவறைகள் கட்டப்படும். ஆண்களுக்கான கழிவறையை ஆண்களும், பெண்களுக்கான கழிவறையை பெண்கள் மட்டும் பயன்படுத்துவதே மனித நாகரிகத்தில் பொதுவாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கோயில் ஒன்றில் ஆண், பெண் மற்றும் பிராமணர் என்று மூன்று விதமான பெயர் பலகையுடன் தனித்தனியே டாய்லெட் முன்பு எழுதப்பட்டிருந்தது. இது ஆங்கில செய்தி ஒன்றில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பொது மக்களிடையே கண்டனத்திற்கு உள்ளானது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேள்விகேட்டபோது; அந்த பெயர் பலகை 25 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தது என்றும், கோவில் நிர்வாகிகள் அங்கு செல்வதில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமே அந்த கழிவறைகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே அருவெறுக்கத்தக்க பிரிவினையை ஏற்படுத்தும் பலகையை உடனடியாக நீக்குவதாக என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

இச்சம்பவம் முன்பு நடந்திருந்தாலும் கழிவறையின் புகைப்படம் திடீரென்று இணையத்தில் பரவி பலர் மத்தியில் வெறுப்பையும் இதில் கூடவா இப்படி என்று பேசும் அளவிற்கு கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

Exit mobile version