Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்!

கீர்த்தி சுரேஷ் பற்றி பறக்கும் மீம்கள்…. பொன்னியின் செல்வன் ரசிகர்கள் செய்யும் ட்ரோல்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

படம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டில் வெளியான வலிமை மற்றும் பீஸ்ட் படங்களுக்கு அடுத்த படியாக அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் குந்தவை பாத்திரத்தில் நடிக்க இருந்து அதை அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக தவிர்த்த கீர்த்தி சுரேஷை கேலி செய்து சமூகவலைதளங்களில் மீம்களும் ட்ரோல்களும் பரவிவருகின்றன. மேலும் கீர்திதி சுரேஷ் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக குந்தவை பாத்திரத்தை வெளிக்காட்டி இருப்பார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Exit mobile version