Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென உயிரிழந்த முக்கிய புள்ளி! மிகுந்த சோகத்தில் நரேந்திர மோடி!

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் பட்டேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருடைய இறப்பு ஒட்டுமொத்த மாநிலத்தையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது.

குஜராத் மாநிலத்தின் மிக மூத்த அரசியல் தலைவராக விளங்கி வந்தவர் கேசுபாய் பட்டேல் தமிழ்நாட்டில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியை போல குஜராத்தில் கேசுபாய் பட்டேல் செல்வாக்குமிக்க தலைவராக இருந்து வந்தவர் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் எப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், இவரிடம் ஆசி பெற்ற பின்புதான் அவர் பிரச்சாரத்திற்கு புறப்படுவது வழக்கம் என்று சொல்கிறார்கள், அந்த அளவிற்கு பெருமதிப்பும் மிக்க ஒரு தலைவராக இருந்து வந்தார் கேசுபாய் பட்டேல்.

இந்த சூழ்நிலையில், சென்ற செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி கேசுபாய் பட்டியலின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது அதனைத் தொடர்ந்து கேசுபாய் பட்டேலுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மருத்துவர்களின் அறிவுரைப்படி காந்தி நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் கேசுபாய் பட்டேல் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் என அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

அதன்பின்பு அவர் குணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், வயது மூப்பு காரணமாக அவரது உடல் நலம் தேறி வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துக்கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருக்கின்ற ஸ்டெர்லிங் என்ற தனியார் மருத்துவமனையில் அவர் காலமானதாக, அறிவிக்கப்பட்டிருக்கிறது அவருடைய இறப்பு குஜராத் மாநில மக்களிடையே மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது இந்த நிலையில் நாடு முழுதும் இருக்கின்ற பல்வேறு அரசியல் கட்சியினர் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

குஜராத் மாநிலத்தில் பாஜக சார்பாக மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் கேசுபாய் படேல். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 1960 இல் இருந்து பாரதிய ஜன சங்கம் கட்சியில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர் கேசுபாய் பட்டேல் ஆவார்.

Exit mobile version