ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்!
கடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் காலநிலை மாற்றங்கள் பல மாறுதல்களை சந்தித்து வருகிறது. அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். உலகம் வெப்பமயமாதலை குறைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாமோ யாரோ என்னமோ சொல்லுங்கள் என்று மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு தேவையான இடங்களில் எல்லாம் கட்டிடங்களை எழுப்பி வருகிறோம்.
ஆனால், உலகமோ நானும் என் பங்குக்கு உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று தற்போது பல இயற்கையும் சில பேராபத்துக்களை ஏற்படுத்தி வருகிறது. அதை நம்மால் தான் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதுவே நம்மால் தாங்க முடியாத பட்சத்தில் இன்னும் பல இயற்கை அழிவுகளை எப்படி கையாள போகிறோம். அறிவியலாளர்கள் பல வருடங்களாகவே பனிப்பாறைகள் உருகி வருவதாக சொல்லிக் கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் தற்போது பல இடங்களில், மேக வெடிப்பு, அதிக மழை, அதிக வெயில், நிலச்சரிவு, நிலநடுக்கம், வெள்ளம், என பல பாதிப்புகள் உலக அளவில் மக்களை பாதித்துள்ளது. இதை எல்லவற்றையும் விட தற்போது கொரோனாதான் மிகப்பெரிய பேரழிவாக உள்ளது. இதை உருவாகினார்கள் என்று கூறப்பட்டாலும், இதுவும் ஒரு இயற்கை பேரழிவுதான் என்று பலரும் நினைக்கும் வண்ணம் உள்ளது.
அதைதொடர்ந்து தற்போது ஐ.நா குழுவால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு காலநிலை மாற்றம் குறித்த சமீபத்திய அதிகாரபூர்வ அறிவியல் தகவல்களை தொகுத்து அறிக்கையாக இன்று வெளியிடப்படுவதாக தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. வருடா வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா உச்சி மாநாட்டிற்கு முன்னதாக புவி வெப்பமடைதலின் தற்போதைய பாதிப்புகள் மற்றும் எதிர்கால அபாயங்கள் குறித்த சமீபத்திய உண்மைகளை இந்த அறிக்கை வழங்கும்.
அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை கிளாஸ்கோவில் நடக்கும் ஐ.நா காலநிலை உச்சிமாநாட்டில், ஒவ்வொரு நாடும் புவி வெப்பமடைதலை தடுக்கவும், அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெறவும் என்ன செய்ய முடியும் என்பதையும் விவாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அதாவது 3.6 டிகிரி பாரன்ஹீட்க்குள் உள்ளே வைத்துக் கொள்வது, குறித்தவற்றை இலக்காகக் கொண்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட இதுவரை 200 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.