Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

50 மற்றும் 100 ரூபாய் UPI பேமெண்ட்களுக்கான முக்கிய கட்டுப்பாடு!! NPCI யின் திட்டம்!!

Key restriction for UPI payments of Rs 50 and Rs 100!! Project of NPCI!!

Key restriction for UPI payments of Rs 50 and Rs 100!! Project of NPCI!!

நம்முடைய அன்றாட வாழ்வில் மேற்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகள் லோ டிக்கெட் பேமெண்ட் என்று அழைக்கப்படுகிறது.இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI – National Payments Corporation of India) திட்டமிட்டுள்ளது.

தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய யுபிஐ பேமென்ட் ஆனது 50 முதல் 100 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் தான். அதிகபட்சமாக சில நேரங்களில் அல்லது சில நாட்களில் 1000 முதல் 5000 வரை பயன்படுத்தும் நிலை ஏற்படும்.யுபிஐ சேவையில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் பரிவர்த்தனை தோல்விகளை குறைக்கும் நோக்கத்தின் கீழ் லோ-டிக்கெட் பேமண்ட்களை யுபிஐ லைட்டிற்கு மாற்றுவதற்கான வேலைகளை என்பிசிஐ செய்து வருகிறது. இப்படி செய்வதன் மூலம் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சுற்றுச்சூழல் அமைப்பானது (Unified Payments Interface ecosystem) இன்னும் திறம்பட செயல்படும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ சேவையில் ஏற்படும் சரிவுகள் (Declines) ஆனது, கடந்த 2016 ஆம் ஆண்டில் 8-10 சதவீதமாக இருந்தது, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 0.7 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) திலிப் அஸ்பே கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தற்போது, 400 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்கள், நிகழ்நேர கட்டணங்களுக்கு யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இதில் சிறிய அளவிலான தொகையை அனுப்பும் பயனர்கள் யுபிஐ லைட் சேவையை பயன்படுத்தினால், யுபிஐ சேவையில் ஏற்படும் சரிவுகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

மேலும், யுபிஐ லைட் என்பது யுபிஐ பின் நம்பரை பயன்படுத்தாமலேயே குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் சேவையாகும். இதன் கீழ் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆர்பிஐ நவம்பர் ஒன்றாம் தேதி முதல் யுபிஐ குறித்த சில முக்கிய வெளியீடுகளை அறிவித்தது. அவை,

✓ யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பானது (UPI Lite Transaction Limit) ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

✓ யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

✓ யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், அதை தானாகவே டாப்-அப் செய்யும் ஆட்டோ டாப்-அப் அம்சமும் (Auto top-up feature) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய அரசாங்கத்திற்கு யுபிஐ சேவைகள் தொடர்பான இந்த மாற்றங்கள் எல்லாமே மிகவும் முக்கியம். ஏனென்றால் கடந்த 2024 அக்டோபரில் ரூ.23.5 டிரில்லியன் மதிப்புள்ள 16.58 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் (16.58 billion UPI transactions worth Rs.23.5 trillion) நடந்துள்ளதாக என்பிஐசி-யின் தரவுகளை காட்டுவதாக அமைந்துள்ளது.

Exit mobile version