Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!

Key restrictions that came out for this company! Information published by the Reserve Bank!

Key restrictions that came out for this company! Information published by the Reserve Bank!

இந்த நிறுவனத்திற்கு வெளிவந்த முக்கிய கட்டுப்பாடுகள்! ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்!

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்று போடப்பட்டுள்ளது.அந்த உத்தரவில் ஆன்லைனில் டிஜிட்டல் முறைப்படி கடன் வழங்கும் நிறுவனக்கள் தங்கள் அமைப்பில் சேர்க்கப்பட்ட முகவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும். முகவர்கள் அந்த கடனை திரும்ப செலுத்தாத பட்சத்தில் கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ளலாம்.

அதன் பிறகு கடன் மீட்பு நடவடிக்கையை தொடர்வதற்கு முன்பாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி காசோலை பவுன்ஸ் மற்றும் அபராதம் தொடர்பான தகவல்களை தனித்தனியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் அனைத்து கடன் சேவை வழங்குனர்களும் நிச்சயம் குறைதீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

குறைதீர்க்கும் அதிகாரியை கடன் வாங்குபவர்களை கையாளும் நிறுவனங்கள் மட்டுமே நியமிக்க வேண்டும். அதனை தொடர்ந்து டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக வட்டி வசூல் செய்வதை தடுப்பதற்கும் தவறான கடன் வசூலை கட்டுப்படுத்தவும் கடந்த வருடம் ரிசர்வ் வங்கியால் பல்வேறு கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version