CANADA: காலிஸ்தான் பிரிவினை வாதிகள் கனடாவில் உள்ள சொந்த நாட்டு மக்களை வெளியேற கூறி பேரணி நடத்தி வருகின்றனர்.
கனடா நாட்டில் உள்ள அவர்களுக்கு எதிரான காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக கனடா நாட்டில் இயங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கட்டுப்படுத்த தொடர்ந்து இந்திய வலியுறுத்தி வருகின்றது.
ஆனால் இப்போது அந்த காலிஸ்தான் பிரிவினை வாதிகள் அதிர்ச்சி சம்பவத்தை செய்துள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடா நாட்டு மக்களுடன் இது எங்கள் நாடு நீங்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்திய மாநிலமான பஞ்சாப்பையும் தங்களுக்கான தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்.
இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினை இயக்கங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல நாடுகளில் அவர்கள் சுதந்திரமாக உள்ளனர் அதுவும் குறிப்பாக கனடாவில் அதிகம் சுதந்திரமாக உள்ளனர். தற்போது கனடாவில் உள்ள இந்திய வாழ் மக்களுக்கு இடையூறாக இருந்து வருகின்றனர்.
தற்போது கனடா சொந்த நாடு மக்களுக்கு எதிராக கிளம்பியுள்ளனர். கனடா மக்களுக்கு எதிராக அணிவகுப்பு மேற்கொண்டு அதில் வெள்ளை இன மக்கள் ஐரோப்பாவிற்கும், இஸ்ரேலுக்கும் திரும்பி செல்ல வேண்டும் என்றும் கனடா எங்கள் சொந்த நாடு என்றும் சொல்லி பேரணி நடத்தியுள்ளனர்.