CANADA-INDIA:கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்துகள் மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளார்கள். அதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தியாவை அடுத்து சீக்கியர்கள் அதிகம் வாழும் நாடு கனடா. இங்கு உள்ளவர்கள் பெரும்பாலானோர் காலிஸ்தான் பிரிவினை பிரச்சனையின் பொது கனடாவில் குடியேறியவர்கள். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் கனடாவில் உள்ள சீக்கிய தலைவர் “நிஜ்ஜார்” மர்மக்கும்பலால் தாக்கப்பட்டு படுகொலை செயப்பட்டார். இதற்கு இந்தியாதான் காரணம் என கனடா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளின் தூதரத்தில் இருந்த அதிகாரிகள் வெளியேற்றப்பட்டார்கள். அங்குள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர்ந்து இந்தியா மீது தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். கனடா வில் உள்ள இந்தியார்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறன்று கிழமை பிராம்ப்டனில் உள்ள இந்து கோவிலுக்கு வழிபட சென்ற இந்துக்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான் விடியோ கனடாவில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் காலிஸ்தான் ஆதரவளர்கள் கையில் கொடியுடன் , இருப்பு கம்பிகளை கொண்டு இந்து பக்தர்களை தாக்கியுள்ளார்கள். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி அவரிகள் தனது சமூகவலைதளத்தில் ” இத்தியர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது என்றும் கனடா அரசு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.