தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு மு க ஸ்டாலின் மற்றும் நடிகை குஷ்பு மற்றும் எல் கே சுதீஷ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்திருக்கின்றன.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் முதல்வரின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு நடிகை குஷ்பூ மலர்தூவி மரியாதை செய்துள்ளார்.
அதேபோன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் அவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து தன் இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
அதுமட்டுமன்றி மதிமுக கட்சியின் நிறுவனரும் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு வைகோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முதல்வரை நேரில் சந்தித்து தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
முன்னதாக திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆறுதல் கூறி மரியாதை செலுத்தியுள்ளனர்.