Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பச்சிளம் குழந்தையை கொன்று குப்பையில் வீசிய விவகாரம்! 6 மாதத்திற்குப் பின் கொலையாளி கைது!

பிறந்த ஒரு சில மணி நேரம் கூட ஆகாத பச்சிளம் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி விட்டுப் போன சம்பவம் தான் ஆறு மாதத்திற்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது அந்த கொலையாளி யார் என்ற உண்மை தெரிந்து உள்ளது.

திருவனந்தபுரம் அருகே உள்ள சாந்தனூர் என்ற பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் கடந்த மாதம் ஜனவரி 4ஆம் தேதி ஒரு பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. அந்த குழந்தையை பிறந்த சில மணி நேரங்கள் கூட ஆகாத நிலையில் கொன்று குப்பைத்தொட்டியில் யாரோ வீசி சென்றுள்ளனர். இதுகுறித்து சாந்தனூர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து குழந்தை யாருடையது யார் வீசிச் சென்றது என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர்.

மேலும் அந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை மருத்துவமனையில் செய்துள்ளனர். குழந்தை கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த கொடூரமான செயலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக போலீசார் இறங்கினர். குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்பட்டது.

மேலும் சாந்தனுர் பகுதியில் சமீபத்தில் யாருக்காவது குழந்தை பிறந்ததா? கர்ப்பமாக இருந்தாரா ?என்று விசாரணையும் நடந்தது. அதில் அந்தக் குழந்தை சாந்தனுர் அருகே உள்ள வேலுவிளை பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் குழந்தைதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. விஷ்ணுவின் மனைவி ரேஷ்மா. இவர்தான் குழந்தையை கொன்றார் என்பதையும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரேஷ்மாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது குழந்தையைத் தான் தான் கொன்று குப்பைத்தொட்டியில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து காரணம் கேட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் ரேஷ்மா தனக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டதால் அவருடன் சென்று விட தீர்மானித்ததாகவும், அதற்கு இடையூறாக இருக்கும் எனக்கருதி குழந்தை பிறந்ததும் கொன்று குப்பையில் வீசியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து ரேஷ்மாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை நடந்து ஆறு மாதத்திற்குப் பின்னும் துப்பு துலக்கி குழந்தையின் தாயை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பாகவும் பாராட்டுக்குரியதாகும் உள்ளது.

மற்றவருடன் பழக்கம் ஏற்படும் பொழுது தவறு உங்களுடையது. அதற்கு ஏன் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தை இல்லாமல் எத்தனையோ தவம் கிடக்கும் நபர்கள் இருக்கும்பொழுது பச்சிளம் குழந்தையை கொல்லும் மனம் எப்படி வருகிறது? என்பது தெரியவில்லை என்று பலரும் பல வகையில் திட்டி வருகின்றனர்.

Exit mobile version