தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணாதுரை, கருணாநிதி, உள்ளிட்ட திமுக தலைவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் விதத்தில் கருத்து தெரிவித்ததாக அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார்.
திமுக சார்பாக அளிக்கப்பட்ட இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது கலங்கத்தை விளைவிக்கும் நோக்கத்தோடு செயல்படுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்தால், ஒவ்வொரு சமூகம் அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது, உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள்.
அதோடு அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. தற்சமயம் செங்கல்பட்டு சிறையில் இருக்கும் கிஷோர் கே சாமி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்ற அறிவுரை கழகத்தில் தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இந்த சூழ்நிலையில் கிஷோர் கே சாமி மீதான குண்டர் சட்டத்தை உறுதி செய்து அறிவுரைக் கழகம் உத்தரவிட்டு இருக்கிறது. இதன் மூலம் அவர் மீதான குண்டர் சட்டம் உறுதியாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது