Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கு டிடி கொடுத்த நச் முத்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர் பிரபலத்திற்கு டிடி கொடுத்த நச் முத்தம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கப்படும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர் அமைந்துள்ளது.அதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பலரால் பேசப்பட்டது.அதில் முக்கிய கதாபாத்திரமாக முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரம் அனைத்து மக்களையும் அதிக அளவு கவர்ந்தது.

குறிப்பாக அந்த ஜோடிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில் சில மாதம் முன் முல்லை கதாபாத்திரமாக நடித்த சித்ரா தனியார் விடுதி ஒன்றில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த செய்தியானது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

அவர் ஹேம்நாத் என்பவரை காதலித்து நிச்சயம் செய்து கொண்டார்.பிறகு விசாரணையின் போது தான் தெரியவந்தது அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டது.அவரது கணவரின் சந்தேகத்தினால் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அவரது கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு நபர் நடித்து வருகிறார்.ஆனால் சித்துவை போல இல்லை என பல தரப்பினர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பிகைன் வுட் கோல்டு ஐ கானிக் அவார்டு நிகழ்ச்சி ஒன்றைநடத்தியது.அதில் பாண்டியன் ஸ்டரில் நடிக்கும் கதிருக்கு அவார்டு வழங்கியது.இதை வழங்க விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி யை அழைத்தார்கள்.அங்கு வந்த டி டி குமரனுக்கு பிரபல தொலைக்காட்சி நடிகருக்கான விருதை கொடுத்தார்.விருதை கொடுத்து விட்டு அனைவரின் முன்னே குமரனுக்கு முத்தம் கொடுத்து விட்டார்.

அவர் முத்தம் கொடுத்த புகைப்படத்தை குமரன் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு எண்ணம் தான் வாழ்க்கை என்று கூறியுள்ளார்.இந்த போஸ்டை பார்த்த ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.ஏனென்றால் டிடி விவாகரத்து பெற்ற நிலையில் இவ்வாறு செய்தது இருவருக்குமிடையே தொடர்பு இருக்குமோ என பலரும் சிந்தித்து வருகின்றனர்.

Exit mobile version