Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. தீக்காயம் பட்டவர்கள் முதலில் செய்ய வேண்டியவை செய்யவே கூடாத விஷயங்கள்!!

சில எதிர்பாராத நேரத்தில் நீங்கள் செய்யும் சில தவறுகள் மற்றும் கவனக் குறைவால் சமையல் செய்யும் பொழுது நெருப்பில் சுட்டுக் கொள்கிறீர்கள்.நெருப்பு சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடும் பொழுது தீக்காயங்கள் ஏற்பட்டால் அவை தாங்க முடியாத எரிச்சல்,வலியை உண்டாக்கும்.

தீக்காயங்கள் ஏற்பட்ட பலர் உயிர் பிழைத்தாலும் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் அதன் தாக்கத்தை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.சிலருக்கு தீக்காயங்கள் சிறியவையாக இருந்தாலும் அவர்கள் செய்யும் சில தவறுகளால் அவற்றின் விளைவு கடுமையாக மாறிவிடுகிறது.

தீக்காயங்கள் ஏற்பட்டால் நாம் எல்லோரும் சில விஷயங்களை நிச்சயம் செய்வோம்.அதாவது ஐஸ்கட்டி வைப்பது,தண்ணீரில் தீக்காயம் பட்ட இடத்தை வைப்பது,இங்க் ஊற்றுவது,மண்ணை குழைத்து பூசுவது போன்ற செயல்கள் மூலம் தீக்காய வலி மற்றும் எரிச்சலை கட்டுப்படுத்த இதுபோன்ற செயல்களை செய்கின்றோம்.ஆனால் உண்மையில் இந்த செயல்களால் தீக்காய புண்களின் பாதிப்பு இன்னும் அதிகாமாக வாய்ப்பிருக்கிறது.

தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய விஷயங்கள்:

1)உடலில் தீக்காயம் ஏற்பட்டால் தண்ணீரில் சில நிமிடங்கள் மட்டுமே வைக்கின்றோம்.குறைவான நேரம் தண்ணீரில் தீக்காய பகுதியை வைப்பதால் எந்த பயனும் இல்லை.குறைந்தது 10 நிமிடங்களாவது தீக்காய புண்களை தண்ணீரில் வைக்க வேண்டும்.இப்படி செய்தால் அதன் தீவிரத் தன்மையில் இருந்து மீண்டுவிடலாம்.தோலின் மேற்பரப்பில் மட்டும் லேசான தீக்காயம் இருந்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.

2)அடுத்து சுத்தமான தண்ணீரில் காட்டன் துணியை போட்டு நினைத்து தீக்காயங்கள் மீது மெதுவாக வைத்து எடுத்தால் எரிச்சல் குணமாகும்.

3)தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வளையல்,மோதிரம் போன்ற அணிகலன்கள் அணிந்திருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.அதேபோல் அணிந்திருக்கும் உடைகள் பக்கத்தில் தீக்காயம் ஏற்பட்டிருந்தால் அதையும் அகற்றிவிட வேண்டும்.

4)தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் கொப்பளங்கள் உருவானால் அவற்றை உடைக்க கூடாது.தீக்காயப் புண்ணின் வீரியம் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

5)தீக்காய புண்கள் ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் வைத்து துடைத்து மருந்து அப்ளை செய்து வந்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.

6)தீக்காயம் பட்ட இடத்தில் அழுத்தம் கொடுக்க கூடாது.இயற்கையான கற்றாழை ஜெல்லை லேசான தீக்காயங்கள் மீது அப்ளை செய்தால் அவை சீக்கிரம் ஆறிவிடும்.

Exit mobile version