தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!!
அதிகமாக கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக் கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை வணங்கினால் நிச்சயமாக உங்ககளுடைய துன்பங்கள் குறையும்.
தயிர் சாதத்தை நைவேத்தியமாக செய்து செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் பல விதமான தோஷங்களில் இருந்து நீங்கி அதிர்ஷ்ட்டமான யோகங்களை பெறலாம்.
பைரவருக்கு மிளகு, முட்டை வைத்து தீபம் ஏற்றினால் தீராத எவ்வளவு கடன் இருந்தாலும் விரைவாக தீர்ந்து விடும் என்பது ஐதீகம். அதுபோல் ஒரு முழு எலுமிச்சையை அவருடைய திருவடியில் வைக்கப்பட்டு பின்பு அதனை வீட்டிற்குக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தால் போதும்.
வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள், அனைத்தும் விலகி விடும். இதனால் வீட்டில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் எளிதாக நீங்கி ஒற்றுமை ஓங்கும்.