பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?
*பெண்கள் தாலிக் கயிற்றை வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் பொழுது பெற்ற தாய், கணவன், குழந்தைகள் தவிர வேற யாரும் அருகில் இருக்க கூடாது. முடிந்தளவு யாருடைய துணை இல்லாமல் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள். அடிக்கடி தாலிக் கயிற்றை மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.
*தாலிக் கயிற்றை மாற்ற நினைக்கும் பெண்கள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அதை செய்யக் கூடாது. அதேபோல் அஷ்டமி, பிரதமை திதிகளில் மாற்றக் கூடாது. திங்கள், வியாழக் கிழமைகளில் மட்டும் தான் மாற்ற வேண்டும்.
*16 திரிகளை கொண்ட இந்த திருமாங்கல்யக் கயிற்றை அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் மாற்றினால் மிகவும் சிறப்பு. அதிகாலை எழுந்ததும் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தாலிக் கயிற்றை மாற்றலாம்.
*கழுத்தில் அணிந்துள்ள பழைய தாலிக் கயிற்றை கழட்டாமல் முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து அதில் உள்ள தாலி மற்றும் குண்டுகளை மட்டும் எடுத்து புதுத் தாலிக் கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் பழைய தாலிக் கயிற்றை கழட்டி நீர் நிலைகளில் விட்டு விடவும். நாம் காட்டும் தாலியின் முடிச்சானது நெஞ்சு பக்கத்தில் தான் இருக்க வேண்டும்.
*கருவற்ற பெண்கள் அவர்களின் கர்ப்ப காலத்தில் தாலி கயிற்றை மாற்றவே கூடாது.
*ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் கணவன் கையால் திருமாங்கல்யத்திற்கு குங்குமம் இட்டு ஆசி பெறுவது மிகவும் சிறப்பு.
*தாலி கயிற்றை வெளியில் தெரியும் படி கழுத்தில் தொங்க விடக் கூடாது. இதனால் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் கண்திருஷ்டி நம்மை அண்டி விடும்.
*தினமும் குளிக்கும் பொழுது தாலிக் கயிறுக்கு மஞ்சள் வைத்து வருவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.