நமது நாட்டில் வளரும் ஒரு அற்புத மூலிகை ஜாதிக்காய்.இவை நம் மசாலா பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.அசைவ உணவுகளின் சுவையை கூட்டும் மசாலாக்களில் இதற்கு முக்கிய இடமுண்டு.
உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகப்படுத்தும் ஜாதிக்காயை பல நோய்களை குணப்படுத்துகிறது.அதேபோல் ஜாதிக்காயின் குடும்பத்தில் இருந்து வந்த மூலிகையான ஜாதிபத்திரியில் தைமின்,புரோட்டீன்,நார்ச்சத்து,போலேட்,நியாசின்,கால்சியம்,இரும்புச்சத்து,மக்னீசியம்,மாங்கனீசு,பாஸ்பரஸ்,ஜிங்க் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
ஜாதிபத்தரி மருத்துவ குணங்கள்:
1)நமது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.இதில் இருக்கின்ற மாங்கனீசு உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
2)ஜாதிபத்திரியை சாப்பிட்டு வந்தால் பசி அதிகரிக்கும்.தங்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் ஜாதிபத்திரியை எடுத்துக் கொள்ளலாம்.
3)ஜாதிபத்திரியில் உள்ள நியாசின்,தைமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
4)இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனைகள ஆளாகி வருகின்றனர்.பெரும்பாலான பாதிப்புகள் தூக்கமின்மையால் தான் ஏற்படும்.எனவே நன்றாக உறங்க ஜாதிபத்திரியை எடுத்துக் கொள்ளுங்கள்.
5)இருமல்,சளி போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் அதை குணப்படுத்திக் கொள்ள ஜாதிபத்திரியை சாப்பிடலாம்.
6)இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் வயிறு வீக்கம்,செரிமானப் பிரச்சனை,வாயுத் தொல்லை போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
7)ஜாதிபத்திரியில் இருக்கின்ற கால்சியம்,மெக்னீசியம் சத்துக்கள் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
ஜாதிபத்திரி பயன்படுத்தும் முறை:
**இதை பொடித்து பாலில் கலந்து குடிக்கலாம்.ஜாதிபத்திரி பாலில் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
**ஜாதிபத்திரியை பொடித்து ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகலாம்.