Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

#image_title

தைப்பூசத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்..!

தைப்பூசம் தை மாதத்தில் வரக் கூடிய ஒரு விழாவாகும். இந்த விழா முருகப் பெருமானை கொண்டாட உருவானது. இந்த நாளில் பழனி முருகன் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயிலிலும் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த சிறப்பான நாள் இந்த 2024 ஆம் ஆண்டில் ஜனவரி 25 ஆம் தேதி வருகிறது. அந்த நாளின் காலை 9:15 மணிக்கு மேல் தைப்பூச நட்சத்திரம் துவங்க உள்ளது.

இந்த தை பூச நாளில் முருகனை மட்டும் அல்ல சிவன், பார்வதியையும் வழிபடலாம்…

தைப்பூச விரதம் என்றாலே தனி சிறப்பு தான்.. இந்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நல்லது.

இந்த நாளில் தலைக்கு குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும். அதிகாலை நேரத்திலேயே விரதத்தை தொடங்கி விட வேண்டும்.

இந்த விரதத்தில் பால், பழம் மட்டும் உண்ணலாம்… இதை தவிர வேறு எதை உண்டாலும் விரதம் முழுமையாகாது…

விரதம் இருக்க தொடங்கிய பின் முருகன் கோயிலுக்கு சென்று சர்க்கரை பொங்கல் செய்து நெவேத்தியமாக படைத்து விட்டு மாலையில் விரதத்தை நிறைவு செய்யலாம்.

இந்த தைப்பூச நாளில் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்…

*குழந்தை பாக்கியம் உண்டாகும்
*விரும்பிய வேலை கிடைக்கும்
*மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை கிடைக்கும்
*திருமண தடை நீங்கும்
*குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதிகரிக்கும்

இந்த நாளில் முருகனின் பெருமையை சொல்லும் முருகன் மந்திரம், கந்தசஷ்டி கவசம் ஆகியவற்றை உச்சரிக்கலாம்…

முருகனுக்கு உகந்த செவ்வரளி பூ கொண்டு பூஜை செய்து வழிபடலாம். இந்த நன்னாளில் அன்னதானம் செய்வதினால் முருகனின் அருளை எளிதில் பெற முடியும்.

Exit mobile version