Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

#image_title

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும்.

இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் மறந்து விடுவார்கள் போல…

எவர் ஒருவர் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொண்டு வருகிறாரோ அவருக்கே குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கும்.

குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவதால் உண்டாகும் பலன்கள்….

தீராத சாபங்கள் அனைத்தும் பஸ்பமாகி விடும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடை விலகும்.

எதிரிகள் தொல்லை நீங்கும்… பணக் கஷ்டம், கடன் பிரச்சனை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

நிம்மதியான வாழ்க்கை வாழ வழிபிறக்கும். ஜாதக தோஷம் முழுமையாக நீங்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்… வம்சம் தழைக்கும். இவை அனைத்தும் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு பலனாக கிடைக்கும்.

Exit mobile version