தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

0
115
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

**கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசி கொள்ள கூடாது.

**விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது.

**சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வர வேண்டும்.

**சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தாமல் வரக் கூடாது.

**பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக் கொள்ள கூடாது.

**தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது.

**துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்து செல்லக் கூடாது.

**அமாவாசை அன்று வாசலில் கோலம் போடக் கூடாது. ஏனெனில் இந்த நாளில் முன்னோர்களின் ஆண்மாக்கள் நமது வீட்டை நோக்கி வருவதனால் அது தடை பட கூடாது என்பதற்காகத் தான்.

**அமாவாசை தினத்தில் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. அதேபோல் அந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும்.

**அமாவாசை நாளில் முடி வெட்டுதல், சவரன் செய்தல் போன்ற செயல்களை செய்யக்.
கூடாது. அதேபோல் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

**பெண்கள் எண்ணெய் தேய்த்து கொண்டதும் தலை விரி கோலமாக இருத்தல் கூடாது.

**திருமணமான பெண்கள் கால் கட்டை விரலுக்கு அருகில் உள்ள உரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். அதேபோல் ஒரே விரலில் இரண்டு, மூன்று மெட்டி அணியக் கூடாது.

**பெண்கள் எப்பொழுதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக் கூடாது.

**கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்று கோலமிட கூடாது.

**பெண்கள் நீரில் தங்களின் நிழலை பார்க்கக் கூடாது.

**மாதவிலக்கு ஆகிவிட்டால் பெண்கள் பூஜை அறைக்குள் செல்லக் கூடாது.