தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும்..!!

0
198
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும்..!!

நம்மில் பலருக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்பது கனவாகவே இருக்கும். சிலருக்கு அது விரைவில் நடந்து விடும். சிலருக்கு காலதாமதம் ஏற்படும். ஆனால் எப்பொழுது வீடு கட்ட தொடங்கினாலும் வாஸ்து, நாள், நேரம், மாதம் இவற்றை பார்ப்பது மிகவும் முக்கியம் ஆகும். எப்படி வாஸ்து பார்த்து வீடு காட்டுகின்றமோ அதேபோல் மாதங்களை பார்த்து வீடு கட்டத் தொடங்குவது இன்னும் சிறப்பாக இருக்கும்.

அந்த வகையில் எந்த தமிழ் மாதத்தில் வீடு கட்டினால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

1)சித்திரை – இந்த மாதத்தில் வீடு கட்டினால் வீண் செலவு உண்டாகும்.

2)வைகாசி – இந்த மாதத்தில் வீடு கட்டினால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

3)ஆனி – இந்த மாதத்தில் வீடு கட்டினால் மரண பயணம் ஏற்படத் தொடங்கும்.

4)ஆடி – இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் உங்கள் வீட்டு கால்நடைகளுக்கு நோய் ஏற்படும்.

5)ஆவணி – இந்த மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

6)புரட்டாசி – இந்த மாதத்தில் வீடு கட்டினால் குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் ஏற்படும்.

7)ஐப்பசி – இந்த மாதத்தில் வீடு கட்டினால் உறவினர்களால் கலகம் ஏற்படும்.

8)கார்த்திகை – இந்த மாதத்தில் வீடு கட்டினால் லட்சுமி தேவி அருள் கிட்டும்.

9)மார்கழி – இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் வீடு எழும்பாமல் தடை வரும்.

10)தை – இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் அக்கினி பயம், கடன் தொல்லை ஏற்படும்.

11)மாசி – இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் சௌபாக்கியம் உண்டாகும்.

12)பங்குனி – இந்த மாதத்தில் வீடு கட்ட தொடங்கினால் பண விரையம் ஏற்படும்.