Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

#image_title

Kanavu Palangal in Tamil : பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் கிடைக்கும்..!!

*ஒற்றை பாம்பு கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும்.

*சாரைப்பாம்பு கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பர்கள் போன்ற உருவத்தில் உள்ளார்கள் என்று பொருள்.

*நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போன்று கனவு கண்டால் உங்கள் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

*நல்ல பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று பொருள். அதேபோல் வறுமை உண்டாகும் என்று பொருள்.

*உங்களை பாம்பு கடித்து இரத்தம் வருவது போல் கனவு கண்டால் உங்களை பிடித்த சனி விலகிவிட்டது என்று அர்த்தம்.

*பாம்பு தரையில் மூன்று முறை கொத்துவது போன்று கனவு கண்டால் ஒருவரை பிடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்று பொருள்.

*பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் குறையும்.

*பாம்பு நம் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால் அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

*நல்ல பாம்பு கனவில் வந்தால் எதிரிகளால் தொல்லை உண்டாகும் என்று அர்த்தம்.

*பாம்பு நம் காலை சுற்றி பின்னிக் கொள்வது போன்று கனவு கண்டால் சனி பிடிக்க போகிறது என்று பொருள். பிரச்சனைகள் வரப் போகிறது என்று அர்த்தம்.

*இரட்டை பாம்பு கனவில் வந்தால் நன்மைகள் உண்டாகும்.

*கழுத்தில் மாலையாக பாம்பு விழுவது போன்று கனவு கண்டால் பணக்கார யோகம் உண்டாகும்.

*பாம்பை கொள்வது போன்று கனவு வந்தால் தொல்லை, கஷ்டங்கள் உங்களை விட்டு நீங்கும்.

Exit mobile version