Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்… பெண்கள் சாஸ்திரப் படி செய்யக் கூடாதவைகள்!!

*பெண்கள் நிலத்தை கால் விரலால் கீரக் கூடாது.

*பெண்கள் வாயிற்படிக்கு நேராக படுக்கக் கூடாது.

*நீரில் தன் நிழலைப் பார்க்கக் கூடாது.

*எண்ணெய் தேய்த்துக் கொண்டதும் தலை விரி கோலமாக இருத்தல் கூடாது.

*குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்திருக்கும் போது யாரையும் வழியனுப்பக் கூடாது. அதேபோல் சாப்பிடவும் கூடாது.

*யாரும் சாப்பிடும் பொழுது விளக்கை அணைக்கக் கூடாது.

*வீட்டில் உள்ளவர்கள் வெளி ஊர்களுக்கு சென்று இருக்கும் பொழுது எண்ணெய் வைத்து தலை முழுகுதல் கூடாது.

*பெண்கள் பிரம்ம முகூர்த்த நேரமான காலை, மாலை நேரங்களில் எதிர்மறை வார்த்தைகளை உச்சரிக்கக் கூடாது.

*பெண்கள் இரவில் விளக்கு வைத்த பின் அழக் கூடாது.

*அதேபோல் இரவு விளக்கு வைத்தபின் வளையல்களை கழட்டக் கூடாது.

*திருமணமான பெண்கள் கைகளில் வளையல் இல்லாமல் ஒருவருக்கு உணவு பறிமாறக் கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வீட்டை விட்டு சென்றால் இரவு வீடு திரும்பிட வேண்டும். பிறர் வீடுகளில் தங்கக் கூடாது.

*செவ்வாய், வெள்ளிக் கிழமை அன்று வீடு துடைக்க கூடாது.

*பழையத் துடைப்பத்தை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அன்று தூக்கிப் போடக் கூடாது.

Exit mobile version