Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த கிழமையில் என்ன செய்தால் நல்லது!! இதை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

ஞாயிறு – கோயில் காரியங்கள், திருமண முயற்சிகள், அரசாங்க கடிதங்கள், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை செய்வது நல்லது.

திங்கள் – வீடு வாங்குவது, மனை வாங்குவது, எந்த விஷயத்தைப் பற்றியும் யோசித்து முடிவெடுக்க, பயணங்கள் மேற்கொள்ள சிறந்த நாள்.

செவ்வாய் – வாங்கிய கடனை கொடுக்க, வீடு கட்டுவதற்கான திட்டங்கள் போடுதல், மனை பார்க்கச் செல்லுதல், மருந்து மாத்திரைகள் வாங்க, தொழில் தொடர்பான உபகரணங்கள் வாங்க சிறந்த நாள்.

புதன் – நினைத்த காரியங்கள் வெற்றி தரும், அறிவு சார்ந்த விஷயங்கள், நவீன பொருட்கள் வாங்க, கல்வி தொடர்பான விஷயங்கள், நாம் யோசித்து முடிவெடுத்த காரியங்கள் நடக்க உகந்த நாள்.

வியாழன் – கலைகள் பயில, ஜாதகம் பார்க்க, ஆலய தரிசனம் செய்ய, மதியம் 1 முதல் 1.30 மணிக்குள் நகைகள் வாங்க, பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்ய உகந்த நாள்.

வெள்ளி – தங்க, வைர நகைகள் வாங்க, விலை உயர்ந்த பொருட்கள் வாங்க, பணம் சேர்ப்பது போன்ற விஷயங்கள், சொத்து வாங்க, புது வீடு குடி போக, வீட்டு மனை வாங்க உகந்த நாள்.

சனி – இரும்பு சம்மந்தப்பட்ட பொருட்கள் வாங்க, சொத்து, பணம் தொடர்பான பிரச்சனை முடிய, வழக்கு தொடர்பான விஷயங்கள் வெற்றி பெற உகந்த நாள்.

இவ்வாறு எந்த கிழமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து அதற்கேற்றவாறு செய்து வருவதன் மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

Exit mobile version