Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த நாளில் என்ன செய்தால் நல்லது..!

Know.. Which day is better to do..!

Know.. Which day is better to do..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த நாளில் என்ன செய்தால் நல்லது..!

வாரத்தில் உள்ள அனைத்து நாட்களுமே நல்ல நாட்கள் தான். சில கிழமைகள் வழிபாட்டிற்கு உகந்தவையாக இருக்கும். சில கிழமைகள் வேறு செயல்கள் செய்ய உகந்தவையாக இருக்கும்.

இவ்வாறு வாரத்தின் 7 நாட்களும் ஒவ்வொரு சிறப்பை கொண்டிருக்கின்றது. அந்தவகையில் எந்த நாட்களில் என்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1)ஞாயிற்று கிழமை

வாரத்தின் முதல்.. சூரிய பகவானுக்கு உகந்த நாள் ஞாயிறு. இந்த நாள் ஆன்மீக பயணம் மேற்கொள்ள உகந்த ஒன்றாக இருக்கின்றது. திருமணம் நிச்சயம் செய்ய.. திருமணம் நடத்த உகந்த நாள்.

2)திங்கட்கிழமை

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்க உகந்த நாள். ஆனால் இல்லம்.. இல்லத்திற்கு தேவைப்படும் பொருட்கள், நிலம் வாங்க உகந்த நாள் அல்ல.

3)செவ்வாய் கிழமை

முருக பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாயில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தலாம். வீட்டிற்கு தேவைப்படும் பொருட்கள் வாங்கலாம். புதிதாக தொழில் தொடங்க உகந்த நாள் செவ்வாய்.

4)புதன் கிழமை

மங்களகரமான நாள் புதன்.. இந்த நாளில் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்கள் வாங்கலாம். வீட்டிற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கலாம். எந்த ஒரு செயலையும் இந்த புதனில் மேற்கொள்ளலாம்.

5)வியாழக்கிழமை

ஆன்மீக வழிபாட்டிற்கு உகந்த நாள் வியாழன். திருமண முடிவுகள், ஜாதகம் பார்க்க உகந்த நாள்.
ஆபரணங்கள் வாங்கி குவிக்க உகந்த நாளாக வியாழன் உள்ளது.

6)வெள்ளிக்கிழமை

கோயிலுக்கு செல்ல உகந்த நாள். சுப நிகழ்வுகளை வெள்ளிக்கிழமையில் நடத்தலாம். தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கலாம்.

7)சனிக்கிழமை

இரும்பு, கல் உப்பு வாங்க உகந்த நாள் அல்ல. சனிக்கிழமை ஆன்மீக வழிபாடு மேற்கொள்ள உகந்த நாள் ஆகும்.

Exit mobile version