Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!

Knowing Excel is enough for HCL.. Jobs in Chennai! Interview on October 23, 24!!

Knowing Excel is enough for HCL.. Jobs in Chennai! Interview on October 23, 24!!

சென்னையில் உள்ள HCL என்ற ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு எக்செல் (EXCEL) மட்டும் தெரிந்தால் போதும் என கூறப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த hcl நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் (MEGA WALK IN INTERVIEW) நடைபெற உள்ளது. ஆனால் இந்த பணிக்கு 2முதல் 4 ஆண்டு பணி அனுபவம்  கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவைப்புக்கான அடிப்படை கல்வி தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும் மற்றும் மைக்ரோசாப்ட் எக்ஸலில் (Microsoft Excel) திறமையாக பணியாற்ற தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டயம்.

மேலும் ஆங்கிலம்  சரளமாக பேசவும், நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் Pivot Tables, Vlookup, Intermediate in Power BI, VBA/Macro தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இதுவே இந்த பணிக்கான அடிப்படை தகுதிகள் ஆகும் .இந்த பணிக்கு தகுதி உள்ளவர்கள் HCL என்ற ஐடி நிறுவனத்தில் ID PROOF அப்டேட் செய்து விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான INTERVIEW அக்டோபர் 23 மற்றும் 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை பயன்படுத்தி வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Exit mobile version