சென்னையில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தை பிடித்த கோடம்பாக்கம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வைக்கபட்டிருந்தாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.ஆரம்பத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரித்து வந்த பாதிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணமாக டெல்லியில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் காரணமாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக அதை முறியடிக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டுமே இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக சென்னை ராயபுரத்தில் மட்டுமே அதிக பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது அதை பின்னுக்கு தள்ளி திரு.விக.நகர் மற்றும் கோடம்பாக்கம் பகுதிகள் அதிகம் பாதிக்கபட்டவைகளாக மாறியுள்ளது.
இதுவரை சென்னையில் 2644 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடம்பாக்கத்தில் மட்டுமே 467 பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் திருவிக நகரில் 448 பேர்களும்,ராயபுரத்தில் 422 பேர்களும்,தேனாம்பேட்டையில் 316 பேர்களும், அண்ணா நகர் பகுதியில் 206 பேர்களும், தண்டையார்பேட்டை பகுதியில் 184 பேர்களும், அடையாறு பகுதியில் 107 பேர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் குறைந்தபட்சமாக மணலியில் 14 பேர்களும், சோழிங்கநல்லூரில் 15 பேர்களும் மற்றும் ஆலந்தூரில் 16 பேர்களும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட பகுதிகளான கோடம்பாக்கம்,திருவிக நகர் மற்றும் ராயபுரம் பகுதிகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.