Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவர்களைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்! விரக்தியில் பதிலளித்த டிடிவி தினகரன்!

ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தேவையில்லாதது, அந்த பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நடத்துவது தான் பெருந்தன்மையான செயலாக இருக்கும் இதை திமுகவிடம் எதிர்பார்க்க இயலாது. சசிகலா தொண்டர்களை நிச்சயமாக சந்திப்பார் அவர் வருகை தரும்போது அவருடைய திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் டிடிவி தினகரன்.

பெருந்தன்மையான அரசு என்பதற்கான அடையாளத்தை திமுகவிடம் நாம் எந்த காலத்திலும் எதிர்பார்க்க இயலாது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்திருக்கிறார். திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் எம் ராஜசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்க டிடிவி தினகரன் வருகை தந்தார்.

இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கும் அவர் பேட்டி அளித்தார் அப்படி பேட்டி அளிக்கும் போது சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு இதுதான் என்னுடைய நிலை எனவும், இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ரகசியம் பரம ரகசியம் எனவும், பதில் அளித்தது தொடர்பாக டிடிவி தினகரன் இடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் தந்த டிடிவி தினகரன் அவர் என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என்று எனக்கு தெரியவில்லை. என்ன அர்த்தத்தில் தெரிவித்தார் என்பதை அவரிடம் தான் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். திருந்தி வந்தால் பரதனாக ஏற்றுக்கொள்வோம் என்று நான் முன்பே கூறினேன் அதற்கும், இதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி பயப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை என கூறினார் டிடிவி தினகரன். ஜெயலலிதா பெயரில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பது தேவையில்லாத செயல், இதனை தொடர்ந்து நடத்துவது தான் பெருந்தன்மையான செயலாக இருக்கும்.

ஆனாலும் அந்த பெருந்தன்மையான செயலை திமுகவிடம் நாம் எதிர்பார்க்க இயலாது சசிகலா தொண்டர்களை நிச்சயமாக சந்திப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் அவருடைய திட்டம் தொடர்பாக அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று விரக்தியுடன் பதில் தெரிவித்தார் இதன் காரணமாக? டிடிவி தினகரன் மற்றும் சசிகலா உள்ளிட்டோருக்கு இடையே மோதல் போக்கு தொடர்கிறது என்பதே தெரிய வந்திருக்கிறது.

Exit mobile version