Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொடநாடு விவகாரம் எடப்பாடிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் சசிகலா! தப்பிப்பாரா எதிர்க்கட்சித் தலைவர்?

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தீவிரமாகி வருகின்றது இந்த நிலையில், கொடநாடு எஸ்டேட் தொடர்பான முழு விவரங்கள் அறிந்து கொண்ட சசிகலா இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடைபெற்று நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அந்த வழக்கில் விசாரணை முடியும் நிலையில் ஆட்சி மாறிய சூழ் நிலையில், அந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது. அது தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு அதிமுக வெளிநடப்பு ஆளுநருடன் சந்திப்பு சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை கவனஈர்ப்பு தீர்மானம் என்பது பல விதமான திசைகளில் சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

சிஐடி காலனி சர்வீஸ் அபார்ட்மென்டில் செபாஸ்டின் டிரைவிங் லைசென்ஸ ஐடி போன்றவற்றை கொடுத்து அறை பதிவு செய்து வைத்த வரை தேடிபிடித்து நேற்று முன்தினம் தமிழக காவல்துறையினர் கேரளா விரைந்தார்கள் செபாஸ்டின் அவர் வீட்டில் இல்லாத காரணத்தால், நேற்றைய தினமும் காத்திருந்த காவல்துறையினர் இன்று அல்லது நாளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதன் பின்னணியில் நேற்று முன்தினம் இரவு சென்னை தி நகரில் அபிபுல்லா தெருவில் தங்கியிருக்கின்ற சசிகலா தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த தினகரன், இளவரசி, நடராஜன் சகோதரர், வழக்கறிஞர் விவேக் போன்றவர்களுடன் இரவு இரண்டு மணி வரையில் கொடநாடு வழக்கு குறித்து ஆலோசனைகள் செய்ததாக சொல்லப்படுகிறது எஸ்டேட்டில் ஜெயலலிதாவுடன் தங்கியிருந்தவர் என்ற அடிப்படையில் அந்த எஸ்டேட் தொடர்பான முழு விவரங்களும் சம்பவத்தில் கொள்ளை போன ஆவணங்கள் என்னென்ன என்பது தொடர்பாகவும், சசிகலாவிற்கு முழுமையான விவரமும் தெரியும் என்று சொல்லப்படுகிறது.

அந்த ஆலோசனையின் முடிவில் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை தொடர்பாக ஜெயா தொலைக்காட்சியில் சிறப்பு பேட்டி கொடுப்பதற்கும் தயாராகி வருகிறார் சசிகலா அந்த பேட்டியில் சசிகலா வெளியிடும் தகவல்களால் கொடநாடு வழக்கு கூடுதல் பலம் பெறும் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version