Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவகாசம் கேட்ட தமிழக அரசு! வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து கொடநாடு கொலை கொலை வழக்கை ஜூலை மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம்.

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகான காலங்களில் அவர் கட்டுப்பாட்டிலிருந்த கொடநாடு பகுதியிலிருக்கின்ற அவருடைய சொகுசு பங்களாவில் கொள்ளை நடைபெற்றது.

காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார், இதுகுறித்த வடக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நிபந்தனை ஜாமீனில் இருக்கின்ற கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சயான், வளையார், மனோஜ், உதயகுமார், பிஜின் குட்டி, ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீஷன் ஜிதின் ஜாய், உட்பட 9 பேர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜராகினர்.

உடல்நலக்குறைவு காரணமாக, திபு ஆஜராகவில்லை. கொடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு விசாரணை தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட்டு நடத்தப்பட்டு வருவதால் வழக்கு விசாரணை நடத்துவதற்கு மேலும் கூடுதல் கால அவகாசம் தேவை என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ், உள்ளிட்டோர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த கொலை கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

தொடர்பாக மேல் புலன் விசாரணை நடத்த இருப்பதாலும், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் சேலத்தைச் சேர்ந்த கனகராஜ் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீதரன் விசாரணையை ஜூலை மாதம் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்து எப்படியாவது இந்த வழக்கில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சிக்க வைத்துவிடவேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும் இது தொடர்பாக எந்தவித கவலையுமின்றி தன்னுடைய பணிகளை செவ்வனே செய்து வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

Exit mobile version