Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொடநாடு விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க அதிமுக தயங்குவது ஏன்? சிக்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி?

கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்றையதினம் கவனயீர்ப்பு தீர்மானத்தை சபாநாயகரிடம் வழங்கி இருக்கின்றார்.கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் முக்கிய ஆவணங்களில் கொள்ளை உள்ளிட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், அது குறித்த கூடுதல் விசாரணை மேற்கொள்வதற்காக தற்போதைய திமுக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில்தான் சென்ற 18ஆம் தேதி சட்டசபையில் அதிமுக வின் சார்பாக கொடநாடு எஸ்டேட் பிரச்சினையை எழுப்பி இருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. இதுதொடர்பாக அவர் அனுமதி வாங்கிக் கொண்டு பின்னர் உரையாற்ற வேண்டும் என சபாநாயகர் தெரிவித்த போது அதனை மறுத்து விட்டு வெளிநடப்பு செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. சட்டசபையில் இருந்து வெளியே வந்து கொடநாடு வழக்கில் என்னையும் சேர்ப்பதற்கான சதி வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார். இதுகுறித்து ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஆளுநரையும் அவர் சந்தித்து இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் அதிமுக எதிர்பாராத ஒரு இடத்திலிருந்து ரியாக்ஷன் வந்திருக்கிறது. அதாவது கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவேன் என்று ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவிக்க இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பாக மாறியது.பொதுவாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை சட்டமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் அதுகுறித்து சபாநாயகரிடம் கடிதம் வழங்கப்படும். அதனை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக அரசுத் தரப்பில் ஆலோசனை நடத்தி ஒரு வாரத்திற்குள் சபாநாயகர் முடிவை அறிவிப்பார்.

இந்த சூழ்நிலையில்தான் செல்வப்பெருந்தகை அறிவிப்பு அதிமுகவிற்குள் அதிர்ச்சியையும், சலசலப்பையும், ஏற்படுத்தி இருக்கிறது. எதற்காக இந்த விவகாரத்திற்கு செல்வப்பெருந்தகை நுழைகின்றார் என்று ஆலோசனை செய்த அதிமுக தங்களுடைய வழக்கறிஞரான இன்பதுரை இடம் செல்வப்பெருந்தகை மீது இருக்கக்கூடிய வழக்குகளையும் ஆராய சொல்லி இருக்கிறது. அதோடு அது தொடர்பான பட்டியலையும் தயார் செய்ய பணித்து இருக்கிறது.நேற்று காலை சட்டசபை ஆரம்பிப்பதற்கு முன்னர் 8:00 மணி அளவிலேயே அமைச்சர் ஜெயக்குமார் தன்னுடைய இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அவருடன் அதிமுகவின் வழக்கறிஞரான என்பவரையும் இருந்திருக்கிறார்.

அவசர மற்றும் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக கொடநாடு பிரச்சனையை கருத இயலாது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க இயலாது என விதிகளில் இருக்கின்றது ஆகவே தற்சமயம் இந்த விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க இயலாது இதன் காரணமாக எதிர்க்கட்சித் தலைவரை கட்டம் கட்டும் வேலை ஆளுங்கட்சியினர் செய்து வருகிறார்கள் எதிர்க்கட்சித் தலைவரை மனரீதியாக துன்பத்திற்கு உள்ளாகிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார் ஜெயக்குமார் அவரை அடுத்து உரையாற்றிய அதிமுகவின் வழக்கறிஞரின் மதுரை செல்வபெருந்தகை மீது இருக்கின்ற பழைய வழக்குகளை எல்லாம் பட்டியலிட்டு அவற்றையும் சட்டசபையில் விவாதம் செய்யலாமா என்று தெரிவித்திருக்கிறார் இதன்மூலமாக அதிமுக இந்த விஷயத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

சட்டசபையில் இதுவரையில் எத்தனையோ விவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தை மட்டும் ஏன் அதிமுக தவிர்க்கிறது எதற்காக அதிமுக தடுக்க நினைக்கிறது என்பது தொடர்பாக விசாரணை செய்தபோது ஒரு சில குறிப்புகள் நமக்குக் கிடைத்திருக்கிறது.எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சராக இருந்தவர் இவ்வாறான குற்றவியல் வழக்குகள் தொடர்பாக சட்டசபையில் விவாதம் நடந்தால் என்னவாகும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என சொல்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் அவராகவே முன்வந்து சட்டசபையில் சிக்கிக்கொண்டார் என சொல்லப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி அவரே இந்த பிரச்சனையை முதலில் சட்டசபையில் எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கில் தொடர்புடைய காவலாளி கிருஷ்ண பகதூர் ,மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரின் வாக்குமூலங்கள் தொடர்பாக பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த நிலையில், இந்த பிரச்சனையை சட்டசபையில் விவாதம் செய்யப்பட்டால் காவல்துறை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் அதற்கு பதில் தெரிவிக்க வேண்டும். அப்படி பதில் தெரிவிக்கும்போது கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை குறிப்பிட்டு அதில் சென்ற காலத்தில் விசாரணைகளில் ஏற்பட்ட இடையூறுகள் உள்ளிட்டவற்றை உடைத்து தற்சமயம் கூடுதல் விசாரணைக்கு ஏற்பட்டிருக்கும் தேவை தொடர்பாக முதலமைச்சர் விரிவாக விளக்கம் அளிப்பார்.

சாட்சிகள் தொடர்பாகவும், அவர் விரிவாக பதிவு செய்து கொள்வார் இது எல்லாமே சட்டசபையின் பதிவேட்டில் பதிவு ஆவதற்கான வாய்ப்பிருக்கிறது. இது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்ட ரீதியாகவும், கடுமையான பாதிப்பை உண்டாக்கும் இதன் காரணமாக தான் இந்த விவகாரம் சட்டசபையில் விவாதத்திற்கு வருவதை எப்படியேனும் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று அதிமுக முயற்சி செய்கிறது இருந்தாலும் திமுகவை சட்டசபையில் ஆவணமாக்கி தீருவோம் என்ற முடிவுடன் இருந்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version