Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் அங்கங்கே கட்டியிருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த தைலம் தடவுங்கள் போதும்!!

kolupu katti karaya tips in tamil

kolupu katti karaya tips in tamil

உடலில் அங்கங்கே கட்டியிருக்கும் கொழுப்புகளை கரைக்க இந்த தைலம் தடவுங்கள் போதும்!!

நம் உடல் சீராக இயங்குவதற்கு சில அத்தியாவசிய கொழுப்பு சத்து இருப்பது அவசியமாகும்.ஆனால் கொழுப்புசத்து உடலில் அதிகளவு சேர்த்துவிட்டால் அவை கட்டிகளாக மாறிவிடும்.உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொழுப்புக்கட்டி வரும் என்று சொல்ல முடியாது.உடல் ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொழுப்புக்கட்டி வர வாய்ப்பிருக்கிறது.

கொழுப்பு கட்டி அறிகுறிகள்:- Koluppu katti Symbtoms

1) தோலில் வீக்கம்

2) உடல் வலி

3) உடலில் ஆங்காங்கே சிறு சிறு கட்டி தோன்றுதல்

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்:- Koluppu katti karaya tips in tamil

*கொடிவேலி தைலம்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 150 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 50 கிராம் கொடிவேலி வேர் சேர்த்து காய்ச்சி ஆறவிட்டு கொழுப்புக்கட்டி மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் கரைந்துவிடும்.

*தண்ணீர்

ஒரு கப் தண்ணீரை சூடாக்கி பருகி வந்தால் கொழுப்புக்கட்டி கரையும்.அதேபோல் ஒரு கைப்பிடி கல் உப்பை ஒரு காட்டன் துணியில் போட்டு சூடாக்கி கொழுப்புக்கட்டி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் அவை சில வாரங்களில் கரைந்து விடும்.

*சீரகம் + சோம்பு + கருஞ்சீரகம்

ஒரு கப் தண்ணீரில் 1/4 தேக்கரண்டி சீரகம்,1/4 தேக்கரண்டி சோம்பு மற்றும் 1/4 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு அருந்தி வந்தால் கொழுப்புக்கட்டி கரைந்துவிடும்.

*ஆரஞ்சு தோல் பானம்

ஒரு கிளாஸ் நீரில் ஒரு துண்டு ஆரஞ்சு பழ தோலை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் கொழுப்புக்கட்டி கரைந்து விடும்.

*நல்லெண்ணெய் + மஞ்சள்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து குழைத்து கொழுப்புக்கட்டிகள் மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.

Exit mobile version