கொரோனா தடுப்பூசி! தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த உயர்நீதிமன்றம்!

0
127

நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்துவது தீவிரமடைந்து வருகிறது.நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா ஆரம்பித்து நடைபெற்று வருகிறது. அதோடு தடுப்பூசி செலுத்தும் மையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இந்த நோய் தொற்று நோய் கண்டறியும் பரிசோதனை நிலையங்களும் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன.அதேபோல இந்த தடுப்பூசி எல்லோரும் சலித்துக் கொள்ளவேண்டும் என்று பல பிரபலங்கள் மூலமாக தமிழக அரசும், மத்திய அரசும், ஒன்றிணைந்து பிரபலப்படுத்தி வருகிறது. இதுவரையில் பலரும் இந்த நோய் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் கொரோனா தடுப்பு ஊசி போடுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, எல்லா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சமூகநீதி முன்னேற்றத்திற்கான மையம் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

அதோடு இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் சார்பாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதன் காரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், எல்லா தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து 18 வயது முதல் 45 வயதிற்கு குறைந்த வயது உடையவர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்வதால் ஏதாவது பக்க விளைவோ அல்லது எதிர் விளைவுகள் ஏற்படுமா என்று இந்த மருந்தை தயார் செய்யும் நிறுவனத்துடன் கலந்துரையாடி மாற்றுத்திறனாளிக்கான வயது வரம்பை நிர்ணயம் செய்து மூன்று தினங்களில் இது தொடர்பான முடிவை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கவுண்டர்கள் அமைக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.