Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோடக் மஹிந்திரா வங்கி தலைவரின் திட்டம் – திடுக்கிடும் தகவல்கள்!

இந்தஸ்இந்த் என்ற வங்கியினுடைய சந்தை மதிப்பு சரிந்துள்ளது. இந்த வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பில் 60 சதவிகிதம் சரிந்தது. ஏனெனில் சொத்து மதிப்பு இழப்பு என்பதாலும், டெபாசிட் இழப்பாலும், இந்தஸ்இந்த் வங்கிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தஸ்இந்த் என்ற இந்த வங்கியின் பங்குகளை வாங்க போவதாக கோடக் மஹிந்திரா வங்கி தலைவர், உதய் மஹிந்திரா திட்டமிடுகிறார் என்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவ்வாறு வாங்குவதால் இந்தஸ்இந்த் வங்கியை வாங்குவதால், கோடக் மஹிந்திரா வங்கியின் மதிப்பு 83 சதவீதம் உயரும் என்பதாலும், அவ்வாறு கோட்டக் மஹிந்திராவின் மதிப்பு உயர்ந்தால், இது இந்திய அளவில் எட்டாவது பெரிய வங்கி என்ற இடத்தை வகிக்கும் என்பதாலும், அந்த வங்கி தலைவர் இவ்வாறு திட்டமிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தை பற்றி இந்தஸ்இந்த் வங்கியிடம் கேட்டபோது, அந்த வங்கி நிர்வாகிகள் கூறியது  என்னவென்றால் : “இந்தஸ்இந்த் வங்கியை விற்கப் போவதாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இவ்வாறு கூறப்படும் தகவல்கள் பொய்யானவை” என்றும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version