இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

0
178

இரண்டு வாரத்திற்கு மேல் கொத்தமல்லி வீணாகாமல் இருக்க ஒரு சூப்பர் ஐடியா !! கொத்தமல்லியில் உள்ள நன்மைகள்!!

சமையல் செய்ய நாம் காய்கறி வாங்கப் போகும்போது, இனமாக நமக்கு கொடுக்கும் கொசுறு தான் கொத்தமல்லி. ஆனால் இப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வைத்தால் அதை பயன்படுத்த முடியாதபடி இரண்டு நாட்களில் நாசமாகிவிடும். மேலும் இரண்டு வாரம் ஆனாலும் பச்சைபசேலென எவ்வாறு இருக்க முடியும்? என்பதை பற்றி காணலாம்.

கொத்தமல்லி கொசுறாக கிடைத்தாலும், கொத்தமல்லி தழை தூவி இருக்கும் பொழுதுதான் அந்த சமையலே மணமணக்கும். அவ்வாறு கொத்தமல்லியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அவை நியாசின், தயமின், பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் ரிபோஃப்ளோவின் சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும் புரதச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து என அத்தனை சத்துக்களும் இதில் அடங்கியிருக்கிறது.

அதனை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் நீங்கி, முகத்தில் உள்ள கருமை நாளடைவில் மறையும். கண் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கருவளையம் மறையும். இளமை திரும்ப கொத்தமல்லியை அரைத்து கண்களுக்கு பற்று போடுவது மற்றும் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடுவது போன்றவை செய்யலாம். அழகு குறிப்பு மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

அஜீரணம் நீங்கி வயிற்று பிரச்சனைகளை தீர்க்கிறது. பொட்டாஷியம் சத்து ரத்தத்தை சுத்தம் செய்யும். மேலும் ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். தேனீர் தயார் செய்து குடித்து வந்தால் நீர்க்கடுப்பு, கை கால் வீக்கம், நெஞ்செரிச்சல் ஆகியன தீரும். கொத்தமல்லி ஜூஸ் குடித்து வந்தால் நாளமில்லா சுரப்பிகள் இயங்கும்.

கொத்தமல்லி ஒரு கட்டு வாங்கி வந்து அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் கலந்து தண்ணீரில் மூழ்கும்படி அரை மணி நேரம் ஊறவைக்கவும். அதன் பின் தண்ணீரில் கழுவி ஈரம் போக உலர வைக்க வேண்டும். அதனை காட்டன் துணி கொண்டு அல்லது பேப்பர் கொண்டு சுற்றி நன்கு கொஞ்சம்கூட ஈரமில்லாமல் உலர்த்தி, கொத்தமல்லியை பேப்பர் டவலில் வைத்து சுற்றி அதனை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கவேண்டும்.

கொத்தமல்லி வேரை முன்பே நீக்கிவிடவேண்டும். தண்டு மற்றும் இலைகளை மட்டும் பத்திரப்படுத்தி வைத்தால் இரண்டு வாரத்திற்கு மேலும் கொத்தமல்லி நிறம் மாறாமல் அழுகிப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.