Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?

சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்த சிம்பு:கவுண்டமணி சொன்னது என்ன தெரியுமா?

சந்தானத்துக்கு மன்மதன் படத்தில் சிம்பு முதன் முதலாக வேடம் கொடுத்த போது அதை கவுண்டமணி விரும்பவில்லை என சந்தானத்தின் நண்பரான லொள்ளு சபா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமடி மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் 500 படத்துக்கும் மேல் நடித்திருப்பவர் ’லொள்ளு சபா’ சாமிநாதன். லொள்ளு சபா எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சந்தானத்தோடு இணைந்து நடித்து புகழ்பெற்றதால் அவர் லொள்ளு சபா சாமிநாதன் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடன் லொள்ளு சபாவில் நடித்து இப்போது ஹீரோவாக மாறியுள்ள சந்தானம் பற்றி சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் ‘சந்தானத்துக்கு முதலில் ஹீரோவாகும் ஆசை எல்லாம் இல்லை. அது இப்போது வந்ததுதான். சந்தானம் மன்மதன் படத்துக்கு முன்னரே சில படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது மன்மதன்தான். அந்த படத்தில் சிம்பு சந்தானத்துக்கு பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்தார். ஆனால் அதை அந்த படடத்தில் நடித்த ஜாம்பவான் நடிகரான கவுண்டமணி விரும்பவில்லை.

சிம்புவிடம் சென்று அவன் சினிமாவைக் கலாய்த்து லொள்ளு சபாவில் நடிக்கிறான். நீ ஏன் அவனுக்கு சான்ஸ் கொடுக்கற? எனக் கேட்க, அவரின் பேச்சைக் காதில்  வாங்காத சிம்பு, சந்தானத்தின் காட்சிகளை அதிகமாக்கியதாகக் கேள்விப்பட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை சிம்பு கவுண்டமணியின் பேச்சைக் கேட்டு சந்தானத்தை படத்தில் இருந்து தூக்கி இருந்தால் தமிழ் சினிமா முக்கியமான ஒரு நகைச்சுவை நடிகரை இழந்திருக்கும்.

Exit mobile version