Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சம்பளத்தை திருப்பி கொடுத்தாரா K.R விஜயா ! ஏன்?

#image_title

புன்னகை அரசி என்ற பட்டத்திற்கு கே ஆர் விஜயா என்று சொன்னால் மிகையாகாது. ஒரு சில படங்கள் நடித்த பின் வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டு தன் புகுந்த வீட்டிற்கு சென்று விடுகிறார் விஜயா. அதன் பின் அவர் நடிப்பை தொடரவில்லை.

 

தனது தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்ப தேவர் ‘அக்கா தங்கை’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். அதற்குக் கதை ஆரூர்தாஸ். அக்கா தங்கை பாசத்தை கொண்டு அதற்கு முன் அப்படியொரு படம் தமிழில் வந்ததில்லை. இரண்டுமே ஒரு முக்கியமான கதாபாத்திரம்.

 

அக்கா வேடத்தில் சௌகார் ஜானகியை முடிவு செய்த படக்குழு. தங்கை கதாபாத்திரத்திற்கு யாரை தேடலாம் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, கே ஆர் விஜயா என்று சொன்னதும் சின்னப்ப தேவரின் முகம் மலர்ந்துள்ளது.

 

கே ஆர் விஜயா அவர்களும் திருமணத்திற்கு பின் நடிப்பதில்லை. அதனால் அவர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று தேவர் நினைத்தார். உடனே நீங்கள் சொன்னால் ஒப்புக் கொள்வார் என்கிறார் தாஸ். எம்ஜிஆர் மற்றும் கே ஆர் விஜயா ஜோடியில் எத்தனையோ படங்களை இயக்கிய சின்னப்ப தேவர். அனைவரும் தேவரை முதலாளி என்றுதான் அழைப்பார்கள். ஆனால் கே ஆர் விஜயா மற்றும் அண்ணா என்று சொல்லி தான் அழைப்பார். இரண்டு பேருக்குமே ஒரு பாசம் உள்ளது.

 

புன்னகையரசியின் வீட்டுக்குப் போனார் தேவர். அவரது எதிர்பாராத திடீர் விசிட் இன்ப அதிர்ச்சியாக அமைய, நேராக விஷயத்துக்கு வந்தார். “விஜயா தங்கையாக நடித்தால் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடையும். இதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று நாயரைப் பார்த்துக் கேட்டார். தேவர் கேட்டதும் சட்டென்று மனைவியின் முகத்தைப் பார்த்தார் வேலாயுதம். அவ்வளவுதான்… கே.ஆர். விஜயாவின் கண்கள் கலங்கி உடைந்தன. “என்னை மன்னிச்சுடுங்கண்ணே! இனிமே எனக்கு நடிக்க வருமான்னு தெரியல. எல்லாம் மறந்துபோச்சு!” என்றார். ஆனால் தேவரைப் பார்த்து நாயர் சொன்னார், “ சேட்டா.. உங்க படத்துல விஜயா நடிப்பா.. அதுக்கு நான் பொறுப்பாக்கும்” என்றார். நிறைந்த மனதுடன் தேவர் கிளம்பினார்.

 

தங்கையாகக் கே.ஆர்.விஜயாவும் அக்காவாகச் சவுகார் ஜானகியும் நடித்த அந்தப் படம் வெற்றிபெற்று நூறு நாட்களைக் கண்டது. கே..ஆர். விஜயாவின் திரைப் பயணத்தில் அடுத்த அத்தியாயத்தையே தொடங்கி வைத்தது.

 

கே.ஆர். விஜயா இன்னும் ஒருபடி மேலே சென்று உயர்ந்துவிடுகிறார் ஒரு சந்தர்ப்பத்தில்.

 

இயக்குநர் மாதவன் இயக்கித் தயாரித்த ‘முகூர்த்த நாள்’ பெரும் தோல்வி அடைகிறது. என்றாலும் படத்தின் நாயகியான கே.ஆர்.விஜயாவுக்கு ஒப்பந்தப்படி சம்பளப் பணத்தைக் கொடுக்க அவரது வீட்டுக்குப் போனார் மாதவன். தனது சம்பளப் பணத்தை மொத்தமாக வாங்கிக்கொண்டு பூஜை அறைக்குச் சென்ற விஜயா, அதைச் சாமிப்படத்தின் முன்பு வைத்து, எடுத்துவந்து இயக்குநரிடமே திரும்பக் கொடுத்துவிட்டார். இதை மாதவன் ஒரு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்..

Exit mobile version